இலங்கையில் கனமழை : 14 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கனமழை பாதிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த நிலச்சரிவுகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 72 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ராணுவத்தினர் உணவுப் பொருட்களை வினியோகித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கடற்படையினர் படகுகள் மூலம் வீடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்வதால் மேலும் 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Facebook Comments Box
Author: sivapriya