நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரை

நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், தடுப்பூசி செலுத்துதல், ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து பல்வேறு கட்டங்களாக பிரதமர் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் இன்று மக்களுடன் நடத்தும் ஆலோசனை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

Facebook Comments Box
Author: sivapriya