திருச்சி:ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற பின்னணியில் செல்போனும், தொலைக்காட்சி பெட்டியும்

திருச்சியில் ஒரு குடும்பமே தற்கொலைக்கு முயன்ற பின்னணியில் செல்போனும், தொலைக்காட்சி பெட்டியும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக குடும்பத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி துவாக்குடி வஉசி நகரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நந்தகுமார். இவரது மனைவி மற்றும் 2 மகள்களும், மகனும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் அவரது இளைய மகள் திவ்யாவும், மகன் விக்னேஷும் உயிரிழக்க மனைவியும் மூத்த மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக நந்தகுமாரை கைது செய்தனர். மகள்களும், மகனும் செல்போனிலேயே மூழ்கியிருந்ததாகவும், மனைவி சித்ராதேவி தொலைக்காட்சியிலேயே மூழ்கியிருந்ததாகவும் நந்தகுமார் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் செல்போனையும், தொலைக்காட்சி பெட்டியையும் ஒரு பெட்டியில் அடைத்து பூட்டியதாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த சித்ராதேவி, அரளி விதையை அரைத்து பிள்ளைகளுக்கு கொடுத்ததோடு, தானும் உண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Facebook Comments Box
Author: sivapriya