‘‘தமிழகத்தில் 23% ஆக குறைந்த கொரோனா எதிர்ப்பு ஆற்றல்’’ – ஏப்ரல் மாத ஆய்வில் தகவல்

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சீரோ ஆய்வில் 23 சதவீதத்தினருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சீரோ ஆய்வில் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதத்தினருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சீரோ ஆய்வில் 31 சதவீதத்தினருக்கு எதிர்ப்பாற்றல் இருந்தது. அதன் படி 8 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழக பொதுசுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் நடத்திய இந்த ஆய்வில், “ சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 22, 904 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49 சதவீதத்தினருக்கும், குறைந்த பட்சமாக நாகப்பபட்டினத்தில் 9 சதவீதத்தினருக்கும், செங்கல்பட்டில் 43 சதவீதத்தினருக்கும், காஞ்சிபுரத்தில் 38 சதவீததினருக்கும் இரண்டாம் மற்றும் மூறையாக கொரோனா எதிர்ப்பாற்றல் இருந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் 5,316 பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருந்தது.

கொரோனா எதிர்ப்பாற்றல் சதவீதம் குறைந்தது குறித்து அதிகாரிகள் கூறும் போது புதுவகை கொரோனா வைரஸ்களால் இந்த சதவீதம் குறைந்திருக்கலாம் என்றனர். முதல் கொரோனா அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது சீரோ ஆய்வு நடத்தப்பட்டது. 22, 690 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 6,995 பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்தது.

நான்குவார இடைவெளியானது உடலில் எதிர்ப்பாற்றல் உருவாக்குவதற்கு போதுமான நேரமாக இருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் கட்ட சீரோ ஆய்வு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்.

 

Facebook Comments Box
Author: sivapriya