தென்காசி: வில்லுப்பாட்டு பாடி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை செய்த கலைஞர்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர்கள், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக்காக வில்லுப்பாடல் பாடி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வடக்கு அழகுநாச்சியாபுரத்தைச் சேர்ந்த மாரியம்மாள் வில்லிசை குழுவைச் சேர்ந்தவர்கள், கொரோனாவைத் தடுக்க அரசு கூறும் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி, விழிப்புணர்வு வில்லுப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வில்லுப்பாடல் வடிவில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

 

Facebook Comments Box
Author: sivapriya