நாளை முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்: சென்னை காவல் ஆணையர்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நாளை முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாகன தணிக்கை பணிகளையும் இன்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வடபழனி சிக்னல் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

image

பின்னர் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். “ஊரடங்கு பொறுத்தவரை  இன்று முதல் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர்  சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.  இன்று போக்குவரத்து அதிகமாகி விட்டது. அதனை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலரும் இ-பதிவு பெற்று அத்தியாவசிய பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆகையாலே போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. நாளை முதல் அனைத்து சிக்னல்களும் சென்னையில்  நடைமுறை படுத்தப்படும்.

ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய வாகனங்களுக்கு எந்த விதமான சோதனைகளுமின்றி உரிய நேரத்தில் அனுப்பப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டு மற்றும் மண்ணடியில் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

image

போலீசாரிடம் வாகன ஓட்டிகள் தகராறு செய்யும் சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

Facebook Comments Box
Author: sivapriya