சர்வதேச பயணம் மேற்கொள்பவர்கள் தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும் – மத்திய அரசு

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டிற்காக இந்தியா சார்பில் செல்ல உள்ள குழுவினர், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி சம்மந்தப்பட்டவர்கள் தங்களது பாஸ்போர்டில் அவர்கள் கோவின் தடுப்பூசி தளத்தின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை இணைக்க (Link) வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

image

செலுத்தப்பட்ட தடுப்பூசி வகையை குறிப்பிட வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அதோடு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட நபர்கள் 84 நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமித்திருந்தால் அவர்களுக்கு இரண்டாவது டோஸை விரைந்து வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது மத்திய அரசு. 

 

Facebook Comments Box
Author: sivapriya