விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ்

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ்

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்தில்தான் பெஸாஸ் பயணிக்கிறார். 

அவருடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். இதற்கு முன்னதாக பலமுறை ஆளில்லாமல் இந்த Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் பெஸாஸ் பயணிக்க உள்ளார். 

வரும் காலத்தில் டவுன் பஸ் போல இந்த தனியார் நிறுவனங்களின் ராக்கெட் மூலம் சாமானியன் விண்வெளிக்கு பயணிக்கின்ற வாய்ப்பு பிரகாசமடைந்து வருகிறது. 

View this post on Instagram

A post shared by Jeff Bezos (@jeffbezos)


பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். “ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற பெருங்கனவு எனக்கு உள்ளது. அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

 

Facebook Comments Box
Author: sivapriya