இந்தியாவில் 63 நாள்களுக்குப் பிறகு ஒரு லட்சத்துக்கும் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை, 86,498. இது, கடந்த 66 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும். மட்டுமன்றி, 63 நாள்களுக்குப் பின், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான தினசரி கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதன்மூலம், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,89,96,473 என உயர்ந்துள்ளது.

image

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவிலிருந்து 1,82,282 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது, 2,73,41,462 என்றாகியுள்ளது. குணமடைவோர் விகிதம், 94.29 சதவிகிதமாக உள்ளது. குணமானவர்கள் தவிர, தற்போது சிகிச்சையிலிருக்கும் நபர்கள், 13,03,702 என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகள் – 18,73,485. தொற்று உறுதிசெய்யப்படுவோர் விகிதம், 4.62 சதவிகிதமாக உள்ளது. இது, 15 வது நாளாக தொடர்ச்சியாக 10 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ளது. இதுவரை செய்யப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 36,82,07,596.

மத்திய அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 2,123 பேர் இறந்துள்ளனர். இதுவரை 3,51,309 பேர் இறந்திருக்கின்றனர். இறப்பு விகிதம், 1.21 சதவிகிதமாக உள்ளது.

தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33,64,476 லட்சத்துக்கும் மேலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை, 23,59,39,165 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன. அவற்றில், முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் – 18,93,54,930. இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்கள், 4.65 கோடி தடுப்பூசிகள்.

image

‘மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும், 24.65 கோடி தடுப்பூசிகள் தரப்பட்டுள்ளன. அவர்களின்வசம் ஏற்கெனவே 1.19 கோடி தடுப்பூசிகள் கைவசம் இருக்கின்றன’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Facebook Comments Box
Author: sivapriya