ஊரடங்கில் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடிகை ராஷி கண்ணா: மக்களும் நிதியளிக்க கோரிக்கை

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவளித்துவரும்  நடிகை ராஷி கண்ணா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேலும் உதவ மக்களிடம் நிதி கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நோய்த்தொற்று அதிகரித்த மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. ஊரடங்கு தற்போதுவரை அமலில் இருப்பதால் வேலைவாப்பில்லாமல் வாழ்வாதாரம் இழந்து ஏழை மக்கள் திண்டாடி வருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக ‘சங்கத்தமிழன்’, ’அடங்கமறு’, ’இமைக்காநொடிகள்’, ‘அயோக்யா’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ராஷி கண்ணா ரொட்டி பேங்க் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தினமும் உணவளித்து வருகிறார்.

image

இதற்காகவே, ஒரு தனிக்குழுவை ஏற்படுத்தி உணவினை ஏழை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார்.

image

இன்னும், அதிக மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் ”உங்களால் ஆன நிதியை அளிக்கலாம். 100 பேருக்கு உதவமுடியவில்லை என்றாலும் ஒருவருக்காவது உதவலாமே”  என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கோரிக்கை வைத்திருக்கிறார், நடிகை ராஷிகண்ணா.

 

 

Facebook Comments Box
Author: sivapriya