கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்த கோரி பன்னிரண்டு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 

இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்துமாறு இந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மாற்றிக் கொண்டுள்ளதையும் இந்த கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் முதல்வர். 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெவ்வேறு தன்மைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில முதல்வர்கள் ஒன்றிணைவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து கோடி ரூபாய் வரை கடன் நிலுவை வைத்துள்ள சிறு கடனாளர்களுக்கு ஆறு மாதம்  அவகாசம் தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கேரளா, ஓடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார் முதல்வர். 

 

Facebook Comments Box
Author: sivapriya