வவுனியாவில் வெளிநாட்டு பயணிகளுடன் சொகுசு பஸ் விபத்து.

தனிமைப்படுத்தலுக்காக வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பஸ் நேற்று அதிகாலை ஓமந்தை பிரதேசத்தில் விபத்துகுள்ளாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பயணிகளை தனிமைப்படுத்தலுக்காக பூநகரி மற்றும் கிளிநொச்சி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வேளையிலே இந்த அனர்த்தம் நடந்துள்ளது.

ஓமந்தை பிரதேசத்தில் A 9 வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கண்டைனர் லொறியுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Facebook Comments Box
Author: admin