சீனாவில் வழிதவறி 500 கி.மீ. நடந்து நகருக்கு வந்த யானைகள்

சீனாவில் திசைமாறி சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் நடந்து நகருக்குள் வந்த காட்டு யானைகள், மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டபோது நடக்க முடியாமல் ஓய்வெடுத்து வருகின்றன.

தென்கிழக்கு பகுதியில் உள்ள யோனன் மாகாணத்தின் ஹூனிங் நகருக்குள் கடந்த 3ஆம் தேதி 15 காட்டு யானைகள் திடீரென புகுந்தன. வீதிகளில் நடந்து கிடைத்ததை உண்டு நடமாடிய யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறை நடத்திய ஆய்வில் வனப்பகுதியில் இருந்து வழிதவறி எதிர்திசையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இந்த யானைகள் நடக்கத் தொடங்கியதாக அறிந்தனர்.

சுமார் 500 கிலோ மீட்டர் நடந்து நகருக்குள் வந்த யானைகளை, வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்தனர். வனப் பகுதி நோக்கி செல்லத் தொடங்கிய யானைகள், நடக்க முடியாமல் படுத்து ஓய்வெடுப்பதாகவும், களைப்பு நீங்கி பிறகு அவை பயணப்படும் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

 

Facebook Comments Box
Author: sivapriya