இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் விளக்கமளிக்க இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. மேலும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்புவிடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், முதல்வரின் தனிச் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் முதல்வர் ஆளுநரை சந்தித்தபோது அவர் ரூ.1 கோடி நிவாரண நிதியாக அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சந்திப்பில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

 

Facebook Comments Box
Author: sivapriya