‘உ.பி. தலைமைச் செயலராக இருந்தவர்’ – இந்திய தேர்தல் ஆணையராக அனுப் சந்திரா பாண்டே நியமனம்

இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனுப் சந்திரா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுப் சந்திரா பாண்டே 1984 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தவர். 2017 ஆம் ஆண்டு முதல் 2019 வரை உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலராக பணியாற்றியவர்.

அனுப் சந்திரா பாண்டேவை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

Facebook Comments Box
Author: sivapriya