’இதுவும் கடந்து போகும்’ – நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கும் ‘நெற்றிக்கண்’ பாடல்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இருந்து ‘இதுவும் கடந்து போகும்’பாடல் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியிருக்கும் ‘இதுவும் கடந்து போகும்’ பாடலை பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். நம்பிக்கை தரும் வார்த்தைகளால் உருவாகியுள்ள இந்த வீடியோ பாடலில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான பணிகளில் பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். பார்வைச் சவால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவருக்கு இந்தப்படம் 65-ஆவது படமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

நடிகர் சித்தார்த்-ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “அவள்” படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் நெற்றிக்கண் படத்தை இயக்கியுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மெரினா படத்திற்கு இசையமைத்த கிரிஷ் கோபாலக்கிருஷ்ணன் இசையமைக்கிறார்.

 

Facebook Comments Box
Author: sivapriya