”வேலை இல்ல; அதனால் வருமான வரி கட்ட முடியல”- கங்கனா ரனாவத்

பிரபல நடிகை கங்கனா ரனாவத், பணி இல்லாத காரணத்தால் கடந்த வருட வருமானவரியின் பாதித்தொகையை செலுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ அதிகமாக வரிமான வரி செலுத்துபவராக நான் இருக்கிறேன்.
கிட்டத்தட்ட எனது வருமானத்தின் 45% வருமானத்தை வருமான வரியாக செலுத்துகிறேன். ஆனால் கடந்த ஆண்டு வேலை ஏதும் இல்லாத காரணத்தால், வாழ்வில் முதன் முறையாக எனது வருமான வரியின் பாதித் தொகையை செலுத்த முடியவில்லை. நான் தாமதமாக வருமான வரித்தொகையை செலுத்தி்யதால் அரசு மீதமுள்ள பணத்திற்கு வட்டியை விதித்துள்ளது. ஆனால் நான் இதனை வரவேற்கிறேன். தனி ஒரு நபருக்கு காலம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றிணைந்து அந்த காலத்தை விட கடினமாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

image

முன்னதாக, கங்கனா ரனாவத்தின் நடிப்பில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவி’ படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments Box
Author: sivapriya