தமிழ்நாட்டில் மேலும் 17321 பேருக்கு கொரோனா தொற்று – 405 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று 17,321 என பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. 31,253 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,04,258 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

பாதிக்கப்பட்ட 17,321 பேரில் இருவர் ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 22,92,025 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

image

தலைநகர் சென்னையில் 1345 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 2319 பேரும், ஈரோட்டில் 1405 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மற்றும் திருப்பூரிலும் 900க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,522 ஆண்களும், 7,799 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F829350674680950%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

image

image

image

 

Facebook Comments Box
Author: sivapriya