அட்லீ படத்தில் ஹீரோ: சுந்தர் சி படத்தில் வில்லன் – நடிகர் ஜெய்யின் அடுத்தடுத்தப்பட அப்டேட்

ஒரே சமயத்தில் அட்லீ தயாரிப்பில் ஹீரோவாகவும், சுந்தர் சி தயாரிப்பில் வில்லனாகவும் நடிகர் ஜெய் நடிக்கவிருக்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ’தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்திற்குப்பின் சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் அட்லீ தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடிகராகவும், இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கும்  படத்தில் வில்லனாகவும் நடிக்க ஜெய் கையெழுத்திட்டுள்ளார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, இயக்குநர் அட்லீ ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘அந்தகாரம்’ படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments Box
Author: sivapriya