வரலாற்றில் இன்று

●671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.
●1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
●1329 – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
●1523 – டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன.
●1782 – சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார்.
●1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.
●1793 – பிரெஞ்சுப் புரட்சி: கிரோந்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, யாக்கோபியர் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புரட்சிகர சர்வாதிகார ஆட்சியை நிறுவினர்.
●1801 – சிவகங்கையின் சின்னமருது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும் என்ற தனது விடுதலைப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
●1829 – இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.
●1838 – நியூ சவுத் வேல்சில் (இன்றைய ஆத்திரேலியாவில்) இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேயக் குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
●1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் ஒன்றியப் படைகளைத் தோற்கடித்தன.
●1868 – செர்பியாவின் இளவரசர் மூன்றாம் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.
●1871 – கொரியாவின் கங்குவா தீவில் 109 அமெரிக்கக் கடற்படையினர் மெக்லேன் டில்ட்டன் தலைமையில் தாக்குதல் நடத்தினர்.
●1886 – நியூசிலாந்தில் டரவேரா எரிமலை வெடித்ததில் 153 பேர் உயிரிழந்தனர்.
●1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
●1916 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.
●1918 – ஆஸ்திரிய-அங்கேரியப் போர்க்கப்பல் சென்ட் குரோவாசியக் கரைக்கப்பால் இத்தாலிய படகு ஒன்றினால் தாக்கப்பட்டதில் மூழ்கியது. இந்நிகழ்வு அருகில் நின்ற மற்றுமொரு படகில் இருந்து படம் பிடிக்கப்பட்டது.
●1935 – 1932 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன.
●1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரான்சு மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.
●1940 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
●1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
●1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் செக் குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர்.
●1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
●1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் செருமனியர்களினால் கொல்லப்பட்டனர்.
●1945 – ஆத்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
●1956 – இலங்கை இனப்பிரச்சினை: இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
●1957 – கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.
●1967 – இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு நாள் போர் முடிவுக்கு வந்தது.

Facebook Comments Box