செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி பழங்கள் – செய்தியை தவறாக வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைமஸ்

செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி பழங்கள் காணப்பட்டதாக தவறான செய்தியை பதிவிட்டு பிறகு நீக்கியது உலக பிரசித்தி பெற்ற நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம். பேரண்டத்தில் உள்ள கோள்களில் செவ்வாய் கிரகமும் ஒன்று. அதனால் அந்த கோளில் அமெரிக்க உட்பட பல சர்வதேச நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் தான் செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி பழங்கள் காணாபட்டதாகவும், அதை போலீசார் உறுதி செய்ததாகவும் செய்தியை இணையதளத்தில் வெளியிட்டது. சில நிமிடங்களில் அந்த கட்டுரை நீக்கப்பட்டதோடு, அது தவறுதலாக வெளியாகிவிட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது. 

image

இருப்பினும் இது நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை பெற்று விமர்சனத்திற்கு உள்ளானது. சோதனைக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டதாகவும். தவறுதலாக அது வெப்சைட்டில் வெளியாகிவிட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

 

Facebook Comments Box
Author: sivapriya