கோவின் தடுப்பூசி சான்றிதழ்களில் பிழைகள் இருக்கிறதா?- திருத்தம் செய்துகொள்ளும் வழி அறிமுகம்

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு, கோவின் இணையம் வழியாக சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. அப்படி அளிக்கப்படும் சான்றிதழ்களில் பெயர் – பிறந்த வருடம் – பாலினம் போன்ற அடிப்படை தகவல்களில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால், அதை திருத்திக்கொள்ள, இணைய வழி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

image

மத்திய அரசின் ஆரோக்கிய சேது மொபைல் செயலி, தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளன. அந்த வழிமுறை விவரங்கள் இங்கே:

  • http://cowin.gov.in இணையதளத்துக்கு சென்று, பதிவு / உள்நுழை (Register/Sign In) என்பதை க்ளிக் செய்து, தன்னுடைய 10 இலக்க மொபைல் எண்ணை பயனாளர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து அந்த மொபைலுக்கு வரும் ஓ.டி.பி.யை கொடுத்து உள்நுழைய வேண்டும்.
  • அங்கே, தனிநபர் தகவல் பகுதிக்கு சென்று, Raise an Issue பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • அதில், ‘சான்றிதழில் திருத்தம்’ (Correction in Certificate)-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து பெயர் – பாலினம் – பிறந்த வருடம் போன்ற எதில் உங்களுக்கு மாற்றம் வேண்டுமோ, அதை க்ளிக் செய்யவும்.
  • அங்கிருந்து, Continue கொடுத்து, அடுத்தடுத்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

கோவின் இணையதளத்தில் தமிழ் வழி சேவையும் அளிக்கப்படுகிறது. ஆகவே பயனாளர்கள், அதன் வழியாகவும் சரிசெய்துகொள்ளலாம். தடுப்பூசி போடாதவர்கள், முன்பதிவையும் அதன் வழியாக செய்துகொள்ளலாம்.

 

Facebook Comments Box
Author: sivapriya