கள்ளக்குறிச்சி: ஆம்புலன்ஸ் மரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் உயிரிழநத்னர, இருவர் படுகாயம் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று அதிகாலை கர்ப்பிணி பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்துவரப்பட்டார். கர்ப்பிணி பெண்ணுடன் அவரது உறவினர்கள் இருந்துள்ளனர்.

image

இந்நிலையில், ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது இதில்,ஆம்புலன்ஸில் இருந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில், கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கர்ப்பிணி பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பெண் உதவியாளர் படுகாயமடைந்தனர்.

 

Facebook Comments Box
Author: sivapriya