பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 14-ஆவது முறையாக அரையிறுதியில் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்குக்கு முன்னேறினார் நடப்பு சாம்பியனான ரபேல் நடால்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரஞ்ச் ஓபன் “கிராண்ட் ஸ்லாம்” போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரபேல்  நடால் 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி 14-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105-வது வெற்றி இதுவாகும். இதனையடுத்து அரையிறுதியில் ரபேல் நடால் – ஜோகோவிச் ஆகியோர் மோதவுள்ளனர்.  ஜோகாவிச் – நடால் ஆகியோர் 58 ஆவது முறையாக மோதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments Box
Author: sivapriya