இந்தியா: ஒரேநாளில் கொரோனாவுக்கு 6,148 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 1,51,367 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான  நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். 1,51,367 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த எண்ணிக்கைகளின் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,91,83,121 ஆகவும், குணமடைந்தோரின்எண்ணிக்கை 2,76,55,493 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,59,676 ஆகவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 11,67,952 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது வரையில்  23,90,58,360 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Facebook Comments Box
Author: sivapriya