எந்திரன் படத்தில் இன்னொரு ரோபோவாக நடித்தது இந்த நடிகரா? அடேங்கப்பா இவ்வளவு நாள் இது தெரியாமப் பேச்சே…!

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினியின் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அது இப்போதும் ரஜினிக்கு பொருந்தும். இன்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவே உள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி ஒரு பிரமாண்டமான வர்த்தகப் பொருள். 70 வயதிலும் அவருக்கான வேல்யூ அப்படியே இருப்பதுதான் அவரின் பலம்.கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நிட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை.

1995 ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்படம் வெளியான போது ரஜினிக்கான அரசியல் தேவை மிதமிஞ்சி இருந்தது. பாட்ஷா திரைப்பட தயாரிப்பாளரும், அன்றைய அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டே, ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கிவிட்டது’ என பேசினார் ரஜினி. இதனால் ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியையே இழந்தார். 1996ல் நடந்த தேர்தலில் ரஜினியின் தாக்கம் அதிகம் இருந்தது. அப்போது அவர் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற காலம் இருந்தது. இருந்தும் ரஜினி அதை ஏற்காமல் எட்டி உதைத்தார்.

ஆனால் அவரது ரசிகர்கள் சோர்ந்து போகவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆழமாக நம்பினர். ரஜினியின் பெயரை நெஞ்சிலும், கையிலும் பச்சைக் குத்திக்கொண்ட ரசிகர்கள் அவரை அண்ணணாகவே பார்க்கின்றனர். ரஜினி படங்கள் மட்டும் தான் மக்கள் குடும்பத்தோடு பார்க்க வரும் படங்களாகவும் இருக்கின்றன. ரஜினி படத்தில் உச்சபட்ச வசூலை எட்டிய படங்களில் ஒன்று எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் கடந்த் 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது.

2018 ஆம் ஆண்டில் எந்திரன் பார்ட் 2 வெளியானது. அதில் சிட்டி ரோலில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்ல. அந்தப் படத்தில் ரோபோவாக நடித்தது பாரதிராஜாவின் மகனான மனோஜ் தான்! லாக்டுண் நேரமான இப்போது மனோஜ் தன் சோசியல் மீடியா பக்கத்தில் எந்திரன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதன்பின்பே இந்த விசயம் வெளியில் வந்து வைரலாகி வருகிறது.

 

Facebook Comments Box
Author: admin