ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ’கூழாங்கல்’ தேர்வு

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள ’கூழாங்கல்’ திரைப்படம்.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. ஏற்கனவே, இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில்  ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. சமீபத்தில், உக்ரைனில் நடக்கும் ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி திரையிடப்பட்டது.

image

இந்நிலையில், நாளை முதல் வரும் 20 ஆம் தேதிவரை சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கும் ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிட கூழாங்கல் தேர்வாகியிருக்கிறது.  இதனை, விக்னேஷ் சிவன் உற்சாகத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதே ஷாங்காய் திரைப்பட விழாவில் சமீபத்தில் விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் குவித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும் திரையிட தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தகது.

 

Facebook Comments Box
Author: sivapriya