28 மனைவிகள் முன்னிலையில் 37ஆவது திருமணம் செய்த முதியவர் – 135 பிள்ளைகள் பங்கேற்பு

முதியவர் ஒருவர் தனது 135 குழந்தைகள் முன்னிலையில், 37ஆவது திருமணம் செய்து கொள்ளும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

முதியவரின் 28 மனைவிகள் தற்போது உயிருடன் உள்ள நிலையில், அவர்கள் முன்பாகவே தனது 37ஆவது திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தியுள்ளார். இந்த திருமணத்தில் முதியவரின் 135 பிள்ளைகள், 126 பேரக் குழந்தைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபின் ஷர்மா, முதியவரை ’துணிச்சலான மனிதர்’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்தத் திருமணம் எங்கே, எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.

 

Facebook Comments Box
Author: sivapriya