வரலாற்றில் இன்று

●கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது.
●631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர்.
●786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது.
●1011 – லொம்பார்டு கிளர்ச்சி: பாரியின் கிரேக்கக் குடிமக்கள் லோம்பார்டி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர்.
●1488 – இசுக்கொட்லாந்து மன்னர் மூன்றாம் யேம்சிற்கும், கிளர்ச்சிப் பிரபுக்களுக்கும் இடையே இடம்பெற்ற சமரில் மன்னர் கொல்லப்பட்டார்.
●1509 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் அரகொன் இளவரசி கேத்தரீனைத் திருமணம் புரிந்தார்.
●1594 – எசுப்பானியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பு பிலிப்பீன்சின் உள்ளூர்ப் பெருங்குடிகள், மற்றும் அதிகாரிகளின் உரிமைகளையும் சலூகைகளையும் அங்கீகரித்ததன் மூலம், தனது ஆட்சியை அங்கு உறுதிப்படுத்திக் கொண்டார்.
●1770 – பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் சென்ற கப்பல் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் தரை தட்டியது.
●1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
●1805 – அமெரிக்காவின் மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
●1837 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
●1853 – இலங்கை, கொழும்பு நகரில் கொம்பனித் தெருவில் லசுக்காரின்களின் (உள்நாட்டுப் போர்வீரர்களின்) குடியிருப்பு மனைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.
●1895 – வரலாற்றில் முதலாவது தானுந்து ஓட்டப் பந்தயம் பாரிசில் நடைபெற்றது.
●1898 – சீனாவில் சமூக, அரசியல் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நூறு நாள்கள் சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டம் 104 நாட்களின் பின்னர் பேரரசி டோவாகர் சிக்சியினால் இடைநிறுத்தப்பட்டது.
●1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
●1903 – செர்பியாவில் அதிகாரிகள் குழு ஒன்று அரசர் மாளிகையைத் தாக்கி மன்னர் அலெக்சாந்தர் ஒப்ரெனோவிச்சையும், அரசி திராகாவையும் படுகொலை செய்தனர்.

Facebook Comments Box