ஓடிடியில் வெளியாகும் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’?

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகள் மேல் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனது படத்திற்குச் சூட்டி பரபர படப்பிடிப்பை துவங்கினார் பிரபுதேவா. ஆனால், படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னரும் இரண்டு வருடங்களாக வெளியாகாமல் இருக்கிறது பொன் மாணிக்கவேல். கடந்த வருடம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்புடன் வந்தாலும் நிதி சிக்கலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேரடியாக ஓடிடி தளமான  டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பொன் மாணிக்கவேல் வெளியாகவிருக்கிறது என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வரும் என்று சொல்லப்படுகிறது.

 

Facebook Comments Box
Author: sivapriya