’ஆல் ஏரியாலையும் அடிச்சு ஆடும் சிலம்பரசன் ஆட்டத்தை பாரு!’ – ஓடிடியில் வெளியாகும் ‘ஈஸ்வரன்’

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ பட தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியிருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ பொங்கலையொட்டி வெளியானது. பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் பாடல்களும் ஹிட் அடித்திருந்தது. ஓடிடி வருகை அதிகரிப்பால், தியேட்டர் வெளியீட்டிற்குப்பிறகு ஓடிடி நிறுவனங்கள் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி வருகின்றன.

image

’ஈஸ்வரன்’ படத்துடன் மோதிய விஜய்யின் ‘மாஸ்டர்’ படமே ஒரு மாதம் கழித்து அமேசான் பிரைமில் வெளியாகிவிட்டது. ஆனால், ’ஈஸ்வரன்’ வெளியாகவில்லை.

இதனால், சிலம்பரசன் ரசிகர்கள் எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்த சூழலில், நாளை மறுநாள் ஜூன் 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Facebook Comments Box
Author: sivapriya