சென்னை: முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய நாயை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள்

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாயை, சென்னை கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

சைபேரியன் ஹஸ்கி வகையை சார்ந்த நாய் ஒன்று, கடந்த சில நாட்களாக உடல் நலிவுற்று காணப்பட்டது. சென்னையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த நாய் வயிற்றில் முகக்கவசம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வயிற்றில் இருந்த முகக்கவசத்தை கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி வெளியே எடுத்தனர். ஆங்காங்கே தூக்கி வீசப்படும் முகக்கவசத்தால் இது போன்ற கால்நடைகளும் ஆபத்தை சந்திக்கின்றன.

 

Author: sivapriya