பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால், ஜோக்கோவிச் பலப்பரீட்சை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் மற்றும் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

14 ஆவது முறையாக வாகை சூடும் முனைப்பில் நடாலும், 2 ஆவது முறையாக மகுடம் சூடும் முனைப்பில் ஜோக்கோவிச்சும் களமிறங்கவுள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 57 போட்டிகளில் ஜோக்கோவிச் 29 முறையும், நடால் 28 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். பிரெஞ்ச் ஓபனைப் பொறுத்தவரையில் இருவரும் மோதிக் கொண்ட 8 போட்டிகளில் 7 முறை நடாலே வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் நடால் 12 முறை பிரெஞ்ச் ஓபன் தொடரை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோக்கோவிச்சைப் பொறுத்தவரையில் பிரெஞ்ச் ஓபனில் நடாலை கடைசியாக 2015 ஆம் ஆண்டில் வீழ்த்தியிருந்தார்.

 

Facebook Comments Box
Author: sivapriya