ஜம்மு காஷ்மீர்: சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து; அடுத்தடுத்து 20 வீடுகளுக்கு பரவிய தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், 20 வீடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன.

நூர்பா பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. குடியிருப்புகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேறினார். குறுகலான பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருடன் சேர்ந்து பொதுமக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 20 வீடுகள் தீயில் சேதமடைந்தன.

 

Facebook Comments Box
Author: sivapriya