சென்னை: நகைக் கடையிலிருந்து ரூ. 5 லட்சம் திருடிய காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னையில் சோதனை போடுவது போல் நடித்து நகைக்கடையிலிருந்து 5 லட்சம் ரூபாயை காவலர்களே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடையில் கடந்த 26ஆம் தேதி சோதனையிடுவதாகக் கூறி ஷாஜின் மற்றும் முஜிபூர் ரகுமான் என்ற காவலர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்த பணக் கட்டுக்களை யாருக்கும் தெரியாமல் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் 5 லட்சம் ரூபாய் பணக் கட்டுகள் காணாமல் போனதை அறிந்த நகைக்கடை உரிமையாளர் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டதை அறிந்த இரண்டு காவலர்களும், நகைக்கடை உரிமையாளரிடம் பணத்தை திருப்பி அளித்துள்ளனர். இதையறிந்த காவல் இணை ஆணையர் துரைகுமார், சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Facebook Comments Box
Author: sivapriya