முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “ நான் என்னுடைய முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

image

முன்னதாக, கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தகவலால் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் எவரும் பெரிதாக முன்வரவில்லை. ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் கார்த்தியும் தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya