சீன மருத்துவ முறையின் கப்பிங் தெரபியை செய்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால்

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

தொடர்ச்சியாக உடலை ஆரோக்கியத்துடனும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதில் ஆர்வம் கொண்டவர் நடிகர் விஷ்ணு விஷால். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க உடற்பயிற்சிகள் செய்யும் புகைப்படங்களால் நிறைந்து கிடக்கிறது. இதன், அடுத்த நகர்வாக சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்துகொண்டு உற்சாகமுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நம் உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கச்செய்யும் சீனாவின் பழமையான மருத்துவ முறையான கப்பிங் தெரபி வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்களும் சினிமா பிரபலங்களும் மேற்கொண்டுவருகின்றனர். ஒலிம்பிக்கில் பதக்கங்கள் குவித்த மைக்கேல் பெல்ப்ஸும் இந்த தெரபியை மேற்கொண்டிருந்தார். நடிகை ஓவியா, நடிகர் வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் இந்த தெரபியை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த,கண்ணாடி கோப்பைகளை அழுத்தி வைத்து செய்யப்படும் இந்த கப்பிங் தெரபி கடினமாக இருந்தாலும் உடம்பிலுள்ள வலி அனைத்தும் நீக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும் என்று சொல்லப்படுகிறது. இதனை, செய்துகொண்டு பயிற்சியாளருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், ”உடல் வலி மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த புதிய அற்புதமான தெரபிக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya