மதுரை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

மதுரையில் தாய் தந்தையை இழந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மதுரை கூடல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் ராஜா (22). இவர், அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தாய் தந்தை இல்லாத நிலையில், தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அதே பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ராஜா மாணவியுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

image

இதையடுத்து சிறுமியை காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிக்கந்தர் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya