ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு விரைந்து வெளியிட வேண்டும்: தங்கம் தென்னரசு

ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கீழடியில் நடைபெற்று வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில் 800க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள், கருப்பு, சிவப்பு நிற மண் குவளை, தங்க ஆபரண கம்பி, மண் பாணை உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பின சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் அங்கு நேரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வு குறித்தும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.

Author: sivapriya