வெள்ளவத்தை பகுதியில் ஒருபகுதி முடக்கம்.

கொழும்பில் வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பிரதேசங்களில் நாளாந்தம் நடத்தப்படும் சோதனைகளில் 30 தொடக்கம் 40 வீதமானோர் கோவிட் தோற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாக  கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் சுமார் 100 கும் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இன்று அதிகாலை முதல் பெரகும்பா பிரதேசத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரகும்பா பிரதேசத்தில் மட்டுமே கொத்தணி காணப்படுவதாகவும் வெள்ளவத்தையில் வேறு எங்கும் கொத்தணி அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Author: admin