தமிழகத்தில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா – 374 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,62,073 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 27,463 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 21,48,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 374 பேர் உயிரிழந்தனர். இணை நோய் இல்லாத 101 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 29,280 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 84 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றிற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 244 பேர், தனியார் மருத்துவமனையில் 130 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 73 பேர் கொரோனா தொற்றால் பலியாகினர்.

12 வயதிற்குட்பட்ட 605 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது தொடந்து குறைந்து வருகிறது. கோவையில் 2000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு வந்துள்ளது. கோவை-1982, ஈரோடு-1353, சேலம்-894, தஞ்சை-645 ஆக கொரோனா பாதிப்பு உள்ளது.

Author: admin