தமிழன் சுந்தர் பிச்சைக்கு கடந்த 5 ஆண்டுகளில் கூகுள் எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கு தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் தகவல்

தமிழத்தை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட சம்பள விவரம் வெளியாகி, இந்தியர்கள் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் தலைமை கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டினுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை CEO-வாக உள்ளார்.

இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவனங்களில் CEO-க்களின் சம்பள பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு 4.17 லட்சம் கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் பங்குகள் மற்றும் சம்பளமாக இந்த தொகை பேஸ்புக் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவத்தின் CEO-வாக இருக்கும் சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2020 வரை பங்குகள், இழப்பீடுகள், பணம் என அவருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது. நாம் இப்போது பார்க்கும் போது, இத்தனை ஆயிரம் கோடியா என்று நினைக்கலாம், ஆனால் இந்த இடத்திற்கு சுந்தர் பிச்சை சாதரணமாக வரவில்லை.

அமெரிக்காவில் கடினமான பொருளாதார சூழலில் படித்து, கூகுளில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்தார் சுந்தர் பிச்சை. அங்கு எல்லோரையும் போல் சாமானியராக வேலையை செய்யாமல், தனது புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பலவிதங்களி முயற்சி செய்து கண்டுபிடித்தது தான் Google Chrome.

கூகுள் க்ரோம் வருவதற்கு முன்னர், உலகில் முன்னணி நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என தேடுபொறி இருந்தது. அதேபோல் யாகூ நிறுவனமும் தேடுபொறி வைத்திருந்தது.

இதனால் கடந்த 2000 முதல் 2008 காலகட்டத்தில், பெரும்பாலானோர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தான் பயன்படுத்தினர். இணைய உலகில் மிகப் பெரிய சக்தியாக இருந்த இந்த இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தன்னுடைய கூகுள் க்ரோம் மூலம் பின்னுக்கு தள்ளியவர் தான் சுந்தர் பிச்சை.

இவரது கூகுள் குரோம் ஐடியாவை அப்போது இருந்த கூகுள் CEO பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அப்படியே விட்டுவிடாமல் கூகுள் நிறுவனங்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரிடம் தனது முயற்சியை சுந்தர் பிச்சை தெரிவித்தார். அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் தான், கூகுள் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பிரவுசராகவும் உள்ளது.

 

Author: admin