வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ரூ.422 கோடி: விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு இதுவரை 422 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அதன்படி, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் துணை திட்டத்தின் மூலம் விவசாயிகளை மேம்படுத்த பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது.

image

வேளாண் உபகரணங்கள் வாடகை மையங்கள், வேளாண் இயந்திர வங்கி, ஹை-டெக் மையங்கள், பல மாநிலங்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், 2014-15-ம் ஆண்டு முதல் 2020-21-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு 421 கோடியே 65 லட்சம் ரூபாயை வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை வழங்கியுள்ளது.

 

Author: sivapriya