“என் வீட்டு தோட்டத்தில்”.. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பசுமை தோட்ட வீடியோ

வீட்டு காய்கறித்தோட்டத்தை மகளுடன் சேர்ந்து பார்வையிடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவிலுள்ள பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆர்வத்துடன் விவசாயம் செய்துவருகிறார்கள். பல நடிகர்களும் தங்கள் வீட்டில் அழகிய காய்கறித்தோட்டம், மலர்த்தோட்டம், மாடித்தோட்டம் உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளனர். அந்த வரிசையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வீட்டிலுள்ள காய்கறித்தோட்டம் குறித்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

image

பின்னர், மகளுடன் காய்கறி தோட்டத்தை பார்வையிடும் புகைப்படங்களை அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

image

இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா பொதுமுடக்க காலத்தை பயன்படுத்தி வீட்டிலே காய்கறி தோட்டம் அமைப்பதற்கான வேலைகளை செய்ததாகவும், அதுதான் இந்த அளவிற்கு பசுமையான தோட்டமாக உருவாகி உள்ளதாகவும், இந்த பசுமையை போல் மக்களின் நிலைமையும் மாற வேண்டும் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

தொடக்கத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன், பின்னர் மெரினா திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “ டாக்டர்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Author: sivapriya