‘மகாமுனி’ இயக்குநர் சாந்தகுமார் உடன் மீண்டும் இணையும் ஆர்யா

நடிகர் ஆர்யா, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

ஊரடங்கிற்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள, சார்பட்டா பரம்பரை, அரண்மனை-3, எனிமி ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில், மகாமுனி படத்தின் இயக்குநர் சாந்தகுமார் உடன் ஆர்யா மீண்டும் இணைவது உறுதியாகியிருக்கிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, நலன் குமாரசாமி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கவும் ஆர்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

image

மகாமுனி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் வெளியாவது பின்னர் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றாலும் வித்தியாசமான படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆர்யா மிகவும் வித்தியாசமான நடிப்பை இரு வேடங்களிலும் வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

image

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான மௌனகுரு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya