இன்றைய ராசி பலன் – 13-06-2021

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகள். சாதகமான பலன்களை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன்-மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை எதிர்க்கும் போட்டிகளை சமாளிக்க போராடுவீர்கள். ஆரோக்கிய ரீதியான விஷயங்களுக்காக வீண் விரயங்கள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பணியில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது ஏற்றம் தரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீரும், நல்ல தெளிவு பிறக்கும். சக பணியாளர்கள் ஒற்றுமை இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் துருதுருவென சில விஷயங்களை செய்துவிட்டு கவலை பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக ஏற்றம் காணும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமான ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வில்லையே என்று வருத்தப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்கள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. ஆரோக்கியம் சிறக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து எதிர்பார்த்த பல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்தவர் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கம் சமாளிக்ககூடிய தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் உங்களை தேடி வரும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் உடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். சில விஷயங்களில் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு மீறி நடக்கும் பொழுது மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான விஷயங்களில் சாதக பலன் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

மீனம்:
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாங்கிய கடன் தொகைகள் பூர்த்தியாகும் சந்தர்ப்பங்கள் அமையும். குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர்ந்து மந்த நிலை நீடிக்க வாய்ப்புகள் உண்டு. உஷ்ண தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெரியவர்களின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.

 

Author: admin