யூரோ கோப்பை கால்பந்து: மைதானத்தில் மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் – ரத்தான போட்டி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற டென்மார்க் பின்லாந்து இடையேயான இரண்டாவது போட்டி ரத்து செய்யப்பட்டது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணியும் பின்லாந்து அணியும் மோதியது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் டென்மார்க் அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் நிலை தடுமாறி மைதானத்தில் விழுந்து அசைவின்றி கிடந்தார்.

image

இதையடுத்து உடனே அங்கு வந்த மருத்துவ குழுவினர் எரிக்சனை பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதைத் தொடர்ந்து மெடிக்கல் எமெர்ஜென்சி காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Author: sivapriya