கொடைக்கானல்: ரூ. 100ஐ தொட்ட பெட்ரோல் விலை; காய்கறிகள் விலை உயரும் அபாயம்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் விலை 99 ரூபாய் 95 பைசாவிற்கும், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் விலை 100 ரூபாய் 3 பைசாவாகவும் தமிழகத்தின் உட்சபட்சமாக கொடைக்கானலில் உயர்ந்துள்ளது.

image

சமவெளிப் பகுதிகளை விட மலைப்பகுதிகளில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதிகளில் உயர்ந்துள்ள பெட்ரோல் விலையால் மலை காய்கறிகளின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Author: admin