கொரோனா பெருந்தொற்று மீண்டும் சீனாவில் பரவுகிறது.

Read Time:1 Minute, 42 Second

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பெருந்தொற்று தோன்றிய சீனா நாட்டில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.

2019ம் வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் சீன நாட்டின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இத் தொற்று பின்னர் உலகையே இன்றுவரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் பல நாடுகள் இக் கொரோனாவின் 2ம் அலை மற்றும் 3ம் அலைகளை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் சீனாவில் பரவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும். நேற்று முன்தினம் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தொற்றாளர்கள் அனைவரும் சீனாவின் இன்னொரு மாகாணமாகிய குவாங்டாங் மாகாணத்திலே கண்டறியப்பட்டுள்ளனர். அறிகுறி இல்லாத தொற்றாளர்கள் 27பேர் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டபோதிலும் இவர்களை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாளர்களாக சீனாவின் சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை.

Author: admin