ஊரடங்கு தளர்வுகள்: வழக்கம்போல செயல்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்

அரசு அளித்த தளர்வுகள் காரணமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இன்றும் செயல்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு அறிவித்த தளர்வுகளுக்குப் பின்னர், இன்று வழக்கம்போல் மார்க்கெட் செயல்படுகிறது. இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து இன்று குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 450வாகனங்களில் காய்கறிகள் வரும் நிலையில், இன்று 350 முதல் 400வரையிலான வாகனங்களில் மட்டுமே காய்கறிகள் வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

Author: sivapriya